நாங்கள் யார்.?
இது பல வகையான விதைகள் விற்பனைக்கான ஒரு தளம் அல்ல! இது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக திறனுள்ள விதைகள் மட்டுமே விற்பனை செய்யும் தளம்.
உலகத்திலேயே மற்றும் இந்தியாவிலேயே அதிக மகசூல் மற்றும் புரதச்சத்து உள்ள விதைகள்.
மரம் வகைகள்: சூபாபுல் அல்லது சவுண்டல் அகத்தி முருங்கை மேலும் விவரங்களுக்கு….
புல் வகைகள்: சூப்பர் நேப்பியர் குட்டை நேப்பியர் கோ 5 கோ 4 மேலும் விவரங்களுக்கு…
பயறு வகைகள்: வேலி மசால் மேலும் விவரங்களுக்கு….
விதைகளுக்கான செலவு மிகக்குறைவு.
நான் விவசாயி என் நிலத்தில் நானே விளைவித்து நேரடியாக தங்களுக்கு எவ்வித இடைத்தரகர்கள் இன்றி கொடுப்பதால் விலை குறைவாகும் முதல் தரமான விதைகளை மற்ற எவரும் கொடுக்க முடியாத வகையில் விரைவாகவும் தருகிறோம்!
நீண்ட கால பலன்கள்!
நம்மிடம் இருக்கும் விதைகளிலேயே, நீண்ட காலம் பலன் கொடுக்கும் விதைகளை மட்டுமே நாம் உங்களுக்கு கொடுக்கிறோம். ஆகையால் உங்களுக்கான விவசாய பராமரிப்பு செலவு மிகவும் குறைகிறது.
வேலைப்பளு குறைவு!
விவசாய வேலைக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில் மிகுந்த சிரமம் உள்ள இக்கட்டான இக்காலகட்டத்தில், ஒவ்வொரு விதைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிக மகசூல் தரும் விதைகளை மட்டுமே, நாங்கள் கொடுப்பதால், குறைந்த இடத்தில் அதிகம் வளர்ந்து மிக குறைந்த நேரத்தில் சிரமமின்றி அறுவடை உங்களால் செய்ய முடியும். இதனால் ஆட்கள் கூலி ஆட்கள் கிடைப்பதில் உள்ள சிரமம் குறைந்து ஆட்களுக்கான கூலியும் மிச்சமாகும்.
குறைந்த நிலத்தில் அதிக கால்நடை வளர்ப்பு!
ஏனைய தீவன விதைகள் அனைத்தியும் விட அதிக மகசூல் கிடைப்பதால், அதாவது மற்ற தீவன விதைகள் இரண்டு ஏக்கரில் கிடைக்கும் மகசூல், நமது தீவன விதைகள் ஒரு ஏக்கரில் கிடைத்துவிடும்.
இதன் மூலம் ஒரு ஏக்கர் நிலம் நமக்கு கிடைப்பதால், அதை விவசாயம் செய்ய ஆகும் பராமரிப்பு செலவு, மற்றும் விதை செலவு என அனைத்து செலவுகளும் பாதியாகக் குறைகிறது.
மேலும் மீதமான ஒரு ஏக்கர் நிலத்தில் வேறு ஏதேனும் லாபகரமான விவசாயம் செய்யலாம்.
அதிக உற்பத்தித் திறன் மற்றும் ஆரோக்கியம்!
ஏனைய தீவனங்களை விட புரதச் சத்து அதிகமாக உள்ளதால், கால்நடைகளின் ஆரோக்கியம் அதிகரித்து, அதன் பால் கறவை அதிகரிப்பது , உடல் எடை அதிகரிப்பது, முட்டையிடும் திறன் அதிகரிப்பது என அதன் ஒட்டுமொத்த திறனும் கூடுகிறது. தீவணத்திற்கான மற்றும் மருத்துவத்திற்கான செலவுகள் குறைகிறது.
முழுமையான விவசாயம் செய்வதற்கான வழிகாட்டுதல் முறைகள்.
எழுத்து வடிவம் மற்றும் காட்சிவடிவம்.
உங்கள் நிலையில் இருந்து சேவையை வழங்குகிறோம்.
நாங்களே எங்கள் சொந்த நிலத்தில் இருந்து விவசாயம் செய்து இந்த விதைகளை உங்களுக்கு வழங்குவதால், உங்களின் நடைமுறை சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் நாங்கள் நன்கு அறிந்து, அதற்கான முழுமையான தீர்வுகளை உண்மையாகவும், உணர்வுபூர்வமாக கொடுக்க முடியும். உங்களையும் நாங்கள் முழுமையாக புரிந்தும் கொள்வோம். இதுபோன்ற சேவைகளை வேறு எந்த லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட, கூலிக்கு நியமிக்கப்பட்ட ஆட்கள் மூலம் நிச்சயமாக நிறுவனங்களால் வழங்க முடியாது!
ஒரு விவசாயின் நேரடி விற்பனைத் தளம்!
உங்கள் கால்நடைகளின் பசுந்தீவனம் சார்ந்த அனைத்து தேவைகள் சார்ந்த ஒரே தளம்!
உங்கள் தாய்மொழியில்!
உங்களுக்கு எழம் கேள்விகள்!
OUR VALUABLE CUSTOMER's

Murunga Seeds or Moringa Oleifera or Drumstick Seeds 



